நவ ஜனதா பெரமுனவின் தலைவரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றி, ஜனாதிபதி தலைப்பின்கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.
