சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரும், உலர்ந்த இஞ்சி பொட்டலமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
