ஹட்டன் நகரத்திலிருந்து மரண வீடொன்றிற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி நேற்று (23) இரவு வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் கோவில் தெரு வீதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஹட்டன், அரியகம பகுதியில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி , ஹட்டன் நகரத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, மழை காரணமாக சறுக்கி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன், நுவரெலியா மற்றும் ஹட்டன் கண்டி ஆகிய நகரங்களின் பிரதான வீதிகள் மற்றும் துணைப் பாதைகள் மழை காரணமாக வழுக்கும் தன்மை கொண்டவை என்பதால், அந்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு ஹட்டன் பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.
