விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் 2வது நாளான நேற்றைய தினம் 30367 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 792 இடங்கள் குறித்து சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது கடந்த மாதம் 30ம் திகதி முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு அபாயம் அதிகரிப்பதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் பேரில் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
