பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நேற்றைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.
அணித்தலைவர் ச்சரித் அசலங்க 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினால். வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 35.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
டன்ஷின் ஹசான் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை குவித்தார். வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களையும், கமிந்து மென்டிஸ் 3 விக்கட்டுக்களையும் வீழ்;த்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக ச்சரித் அசலங்க தெரிவானார்.
