முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஹெவலொக் சிட்டியிலுள்ள வீடமைப்பு தொகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட டி 56 ரக துப்பாக்கி தொடர்பில் துமிந்த திஸாநாயக்க நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.
