ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகனங்களை ஏலமிடுவதன் 2ம் கட்டம் இன்று இடம்பெறவுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்திற்குரிய 26 வாகனங்களை இவ்வாறு ஏலமிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அரச செலவை குறைத்தல் மற்றும் நிதி மேம்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு வாகன ஏலம் இடம்பெறுகிறது.
இன்று ஏலமிடப்படவுள்ள வாகனங்கள் 10 வருடங்களுக்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் என்பதுடன் அவற்றின் விலைமனு கோரல் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
