இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஓவர் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியிழல் வென்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடுகிறது.
பிரபாத் ஜயசூரிய மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோருக்கு பதிலா விஸ்வ பெர்னான்டோ மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை டெஸ்ட் அணிக்கு தனஞ்சய டி சில்வா தலைமைதாங்குகின்றார்.