ரஷ்ய – யுக்ரைன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று இடம்பெறவுள்ளது. எனினும் இந்த கலந்துரையாடலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் பங்கேற்கமாட்டார் என தெரியவந்துள்ளது.
இதில் பங்கேற்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி சார்பில் அந்நாட்டு தூதுக் குழுவின் பிரதானி விலெடிமீர் மெடின்ஸ்கி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில் யுக்ரைன் ஜனாதிபதி வொல்திமிர் செலன்ஷ்கி அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
