ஜப்பானில் வெப்பக்கதிர் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களில் 14 பேர் பலியாகியுள்ளனர். ஜப்பானில் கடந்த வாரம் முதல் அதியுட்ச வெப்பக்கதிருடன் கூடிய வெயில் சுட்டெரித்து வருகிறது. நீர் நிலைகள் அற்ற பகுதியில் வாழ்ந்த 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வெப்பம் சார்ந்த நோய்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளம் மண்சரிவு அனர்த்தங்களில் 200 பேர் பலியாகிருந்த நிலையில் தற்போது வெப்பக் கதிர்தாக்கமும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் ஜப்பானின் கிபு பகுதியில் வெப்பநிலையானது 39.3 பாகை செல்சியசாகவும் தலைநகர் டோக்கியோவில் 34 பாகை செல்சியசாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் வெப்பக்கதிர் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களில் 14 பேர் பலி
படிக்க 1 நிமிடங்கள்