ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது. யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.