நாட்டின் பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழைவீழ்;ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் Nபுhது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
