2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4 மணி வரை இடம்பெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 17,156,338 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
இந்நிலையில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முதலாவது தேர்தல் பெறுபேற்றினை இன்று நள்ளிரவிற்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
