வெற்றிகரமான தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வெற்றி தொடர்பில் அதிக நம்பிக்கை தமக்குள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டிற்குள் புதிய அரசியல் கலாசார மாற்றமொன்று ஏற்ப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை 3 நாள் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று தாயகம் வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
