ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 2 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் திஸ்ஸா மாவத்த, பமுனுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரென பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
