Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.
‘சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்’ எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் பிரதான நிகழ்வு நாளைக் காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவு பிரதான கடற்கரையில் இடம் பெறவுள்ளது.
