நாட்டில் சில நாட்களாக பெய்து வரும் கன மழைக் காரணமாக 14 மாவட்டங்கள் மண்சரிவு அபாயம் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த மாவட்டங்களில் உள்ள 5,000 இற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
