ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யுக்ரேன் மீதான படையெடுப்பை பலப்படுத்தும் வகையில் ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆழில்லா விமானங்களை ரஷ்யாவிற்கு ஈரான் வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். தமக்கு கிடைத்த தகவலுக்கமைய அவற்றை பயன்படுத்துவது குறித்து இம்மாத்தில் ரஷ்ய படைகளுக்கு பயிற்சி வழங்க ஈரான் தயாராகி வருவதாகவும் உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு..
படிக்க 0 நிமிடங்கள்