ஜனாதிபதியின் கீழ் காணப்படும் சில அமைச்சுகளின் கடமைகளை முன்னெடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுகளுக்கு இவ்வாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
1. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்
2. சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவல்
3. பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
4. பாதுகாப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் இன்று(13) அதிகாலை பயணமாகியுள்ளார். ”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கு பயணிக்கின்றார். இதேவேளை, அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.