வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து குறித்த நபரைத் தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.
நீண்டநேர தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.