கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் ஒரு மீற்றர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பனிப்புயல் காரணமாக சுமார் 30,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
வீதிகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
