பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை ரிஷி சுனக் கட்சி 474 ஆளுநர்களை இழந்துள்ளதுடன் அக்; கட்சியின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
