அமெரிக்காவின் இரட்டைக் கோபுர கட்டிடங்கள் மற்றும் பென்டகன் மீதான அல்குவைதா பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல்களுக்கு இன்றுடன் 24 வருடங்கள் பூர்தியாகின்றன.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் இன்றைய தினம் அமெரிக்காவின் ஒஹியோ உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
செப்டம்பர் 11 தாக்குதல் காலை 8.46க்கு இடம்பெற்றது. இதனால் குறித்த நேரத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. இந்த பாரிய பயங்கரவாத தாக்குதலில் 2977 பேர் கொல்லப்பட்டனர்.
