பசர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்விமைச்சின் முன்பாக அமைதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையால் பாதிப்புக்கள்ளான ஆசிரியர் சங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் ஏற்கனவே வெளியாகியமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, பரீட்சையை மீள நடத்தாத குறித்த 3 கேள்விகளுக்கென அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவது தொடர்பில் பரிந்துரை முன்வைத்திருந்தது.
குறித்த கேள்விகளுக்கு மாத்திரம் புள்ளிகளை வழங்குவதால் எவ்வித பயனும் இல்லையென ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.