தற்போதைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உர மானியம் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் மானிய வழங்கலை கைவிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்கு பின்னர் அவற்றை வழங்குமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கென இதுவரை வழங்கப்பட்ட 15,000 ரூபா உர நிவாரணத்தை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அரசின் கொள்கை பிரகடனத்திற்கமைய குறித்த நிவாரணம் நாளை முதல் அமுலுக்கு வரவிருந்தது.
பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறான நிவாரணம் வழங்குவது ஏனைய வேட்பாளர்களின் மதிப்பை இழக்கச் செய்வதால் அதனை தடுக்கும் வகையில் நிவாரணம் வழங்கலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.