fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 17:20

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தூர்ந்து போன வயல்களில் நன்னீர் மீன் வளர்க்கும் திட்டங்கள் பலவற்றை கமநல சேவைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 18 பிரதேச செயலக பிரிவுகளில் இத்தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய கம்பஹா மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் நாளை மறுதினம் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற மொத்த நிலத்தின் பரப்பளவு 6295 ஹெக்டயர்கள் ஆகும். இதில் 131 ஹெக்டயர் நிலப்பரப்பு தூர்ந்து போயுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலப்பரப்புக்களில் நன்னீர் மற்றும் வளர்ப்பு மீன்களை வளர்க்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 17:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க