fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம்

ITN News Editor
By ITN News Editor மே 18, 2020 13:12

11வது தேசிய இராணுவ அனுஷ்டிப்பு தினம் இன்று நினைவு கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான விசேட நிகழ்வுகள் நாளை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர இராணுவ நினைவு தூபி வளாகத்தில் இடம்பெறவுள்ளன. சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைக்கமை, மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட பாதுகாப்பு பிரதானிகள் பலரும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

2009 ம் ஆண்டு மே மாதத்தில் எல்.டி.டீ.யினருக்கு எதிரான போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த மற்றும் போராடிய இராணுவத்தினரை நினைவுகூர்வதே இதன் நோக்கமாகும்.

இராணுவம் சார்பில் 23 ஆயிரத்து 962 பேரும், கடற்கடை சார்பில் ஆயிரத்து 160 பேரும், விமான படை சார்பில் 443 பேரும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் 2 ஆயிரத்து 598 பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த 456 பேரும் நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவ வீர்களை நினைவுகூரும் வைகயில் 2 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்படும். அத்துடன் மத அனுஷ்டானங்களும் இடம்பெறவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட விசேட விருந்தினர், இராணுவத்தினரின் குடும்பத்தினர் ஆகியோர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறும்.

இதேவேளை, யுத்த நிறைவின் 11 வது வருட பூர்த்தியை முன்னிட்டு, 14 ஆயிரத்து 617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ வரலாற்றில் ஒரு நாளில் அதிகளவானோருக்கு பதவி உயர்வு வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ITN News Editor
By ITN News Editor மே 18, 2020 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo