மாலைதீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய அரசாங்கம் மாலைதீவின் வரவு செலவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மூசா சமீர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் இந்தியா, மாலைதீவுக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.