மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கும்புக்கன பகுதியில் விபத்துக்குள்ளானது. வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.