இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தோனேசியாவின் திமோர் தீவுப் பகுதியில் 133 கிலோமீற்றருக்கு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லையென தெரியவந்துள்ளது. எனினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்தும் அவதானித்து வருவதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.