பறவைக் காய்ச்சல் பரவியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த நாடுகளில் இருந்து விலங்குகள் மற்றும் அவை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உலகின் பல நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் பறவைக்காய்ச்சல் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
