கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் நாளை மறுதினம் காலை 8.00 மணி வரையிலான 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 9,10,11,12,13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
