fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைரஸினால் சீனாவில் அவசரகால நிலை : கட்டுநாயக்கவும் உசார் நிலையில்…

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 18:33

வைரஸினால் சீனாவில் அவசரகால நிலை : கட்டுநாயக்கவும் உசார் நிலையில்…

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட எவரும் இந்நாட்டில் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. விமானத்தில் விசேட பரிசோதனைக்குட்படுத்தப்படுவதுடன் இவ்வைரஸ் இந்நாட்டில் ஊடுறுவதை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாநிலத்திலேயே முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் பல பகுதிகளுக்கும் பரவியமையை தொடர்ந்து சீனாவில் அவசரகால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டது. வூஹான் பகுதியில் வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயிரம் கட்டில்கள் அடங்கிய விசேட வைத்தியசாலையொன்றும் நிர்மாணிக்கப்படுகின்றது.

இதனை ஆறு நாட்களுக்குள் பூர்த்தி செய்து வைரஸ் பரவுவதை தடுப்பதே சீன அரசாங்கத்தின் நோக்கம் ஆகும். கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி சீனாவில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 830 பேர் இத்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை சிங்கபூர், சீனா, தாய்லாந்து, தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான், தாய்வான், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வைரஸ் தாக்கம் செலுத்தியுள்ள்து. இந்தியாவில் இவ்வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

பாம்புகளை உணவாக உட்கொள்வதால் இவ்வைரஸ் தாக்குவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இது முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எவ்வாறாயினும் மேலதிக கல்விநடவடிக்கைகளுக்காகவும் தொழில்களுக்காகவும் சீனாவுக்கு சென்றுள்ள எந்தவொரு இலங்கையருக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லையென வெளியுறவு அமைச்சு தெரிவிக்கின்றது. வெளியுறவு அமைச்சுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை ஏற்படுத்தி இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2020 18:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க