அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் இல்லம் FBI யினரால் திடீர் சோனை…
Related Articles
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ப்ளோரிடாவிலுள்ள வீடு FBI யினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தமது வீட்டுக்குள் நுழைந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்து கண்டனத்தை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். FBI அமைப்பு மற்றும் அமெரிக்க அரசாங்கம் இது தொடர்பில் தமக்கு எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
FBI அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் தமது வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து திறந்துள்ளதாக ட்ரம்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பரிசோதனைகள் தேவையற்றவையெனவும், அரசியல் தேவைகளை அடிப்படையாக கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் ஊடாக 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதை தடுக்க சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.