ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் யுக்ரேனின் ஆயுதங்கள் மற்றும் அணுவாயுதங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். தமது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்ப்பட்டதால் அணுவாயுதங்களை பயன்படுத்த நேரிடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு ரஷ்யா யுக்ரைனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் முதற்தடவையாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ரொயிட்டர் உள்ளிட்ட முக்கிய சர்வதேச செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
ரஷ்யா மீதான தாக்குதல்களை அதிகரிப்பதற்கு யுக்ரைன் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடுமென அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் அடுத்த கட்ட யுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் புட்டின் கருத்து வெளியிட்டுள்ளார்.
