fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் தடுப்பூசி முதலில் ஏழை மக்களையே சென்றடைய வேண்டுமென பாப்பரசர் வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2020 13:17

கொவிட் 19 தொற்று தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அது முதலில் ஏழை மக்களையே சென்றடைய வேண்டுமென கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் காணொளி தொழில்நுட்பத்தினூடாக உரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியின் தேவை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நோயை கட்டுப்படுத்தும் சாத்தியமான தடுப்பூசி உருவாக்கப்படும் பட்சத்தில், அதனை ஏழை மக்களுக்கு வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வரவேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். கொவிட் 19 தொற்றினால் பல மாதங்களாக அவதியுறும் மக்களில் லட்சக்கணக்கானோர் வறிய குடும்ப பின்னணியை கொண்டவர்கள்.

நோய் பரவலால் பொருளாதார ரீதியாகவும், மக்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நாடு அதனை பதுக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் ஐநா. பொதுச்சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2020 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க