பணம் சம்பாதிப்பதற்காக தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பகிர முயற்சித்த நபர் ஒருவர் அவரது மனைவியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் வெல்லவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த தல்விட்டவைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார (வயது 37) என்பவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணிபுரிபவர் ஆவார். அவர் 14 வயது மகளுக்கும் எட்டு வயது மகனுக்கும் தந்தையாவார்.
யூடியூப் சேனலைத் திறந்து, அதனை பிரபலப்படுத்துவதற்காக இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குளியலறையில் இருந்து குறித்த நபர் வெளியே வந்த போது அவரது மனைவி கண்ணில் மிளகாய் பொடியை வீசி வெட்டி படுகொலை செய்துள்ளார்.
சில சமயங்களில் தனது ஒரே மகளின் நிர்வாண புகைப்படங்களை சேனலுக்காக எடுக்க அவரது கணவர் முயற்சித்ததாகவும், அதை மனைவி தடுத்ததாகவும், குடும்பத் தகராறுகள் மற்றும் தன்மீது தாக்குதல்களுக்கு கணவரின் செயல் வழிவகுத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
விசாரணையில்,குறித்த நபர் மனைவி மற்றும் அவரது மகனை வெளியில் வைத்து மூடிவிட்டு மகளை மூடிய கதவுக்கு பின்னால் அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றது தெரியவந்தது. இருப்பினும் அவரது மனைவி வீட்டிற்குள் நுழைந்து, அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை எறிந்து, அவரை வாளால் தாக்கி, தனது மகளை அவதூறிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
இதில் தாக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆடைத் தொழிலாளியான சந்தேகத்திற்கிடமான பெண் வெல்லவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்க மற்றும் வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வெல்லவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் குமார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
