எதிர்காலத்தில் விவசாயிகளுக்காக QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உரம், விதைகள் மற்றும் பல பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு QR குறியீட்டைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரம் காரணமாக கடும் இன்னல்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு மேலதிக மானியங்களை வழங்குவதாக அமைச்சர் அமரவீர உறுதியளித்துள்ளார்.
அரசாங்கம் படிப்படியாக பிரச்சினைகளை சரிசெய்து வருகிறது.
இதேவேளை, தேசிய விவசாயக் கொள்கையொன்றுக்கு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் மாறும்போது மாறாத பொதுவான கொள்கை விவசாயத் தொழில் வளர்ச்சிக்கு அவசியம்.
இந்தக் கொள்கைக்கான ஒப்புதலைப் பெற்று விரைவில் நடைமுறைப்படுத்துவேன் என நம்புவதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
