இந்தியா புதிதாக சமர்ப்பித்துள்ள விவசாய சட்டமூலத்திற்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்து வருகின்றன. இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய விவசாய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் புதுடில்லியில் அணி திரண்டுள்ளனர்.
புகையிரத வீதிகளுக்கு தடை ஏற்படுத்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரு சில புகையிரத சேவைகளை நிறுத்துவதற்கு புகையிரத அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விவசாய நடவடிக்கைகளுக்கு தனியார் துறையினர் பங்களிப்பு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதன் மூலம் இந்திய விவசாயிகளுக்கு பாரிய அநீதி ஏற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.