இன்றைய தினம் முதல் வெளிவிவகார அமைச்சின் கன்சியூலர் பிரிவின் சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தின் ஐந்து நாட்களும் கன்சியூலர் பிரிவு திறந்திருக்குமென வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கன்சியூலர் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கூடுதல் கேள்வி காணப்படும் நிலையிலேயே அது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்பாணம், மாத்தறை, கண்டி திருகோணமலை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலுள்ள கன்சியூலர் அலுவலகங்களும் வாரத்தின் ஐந்து நாட்களும் திறந்திருக்குமென வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
