இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னை கொன்றவர்களை கூட வெறுக்காமல் உலகிற்கு அற்புதமான பாடம் கற்பித்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வருட அரச நத்தார் விழா கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு சூம் தொழிநுட்பத்தினுடாக உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மகாசங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் போட்டியில் தேசிய மட்டத்திலும் 2021 நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டியிலும் வெற்றி ஈட்டிய மாணவ மாணவியருக்கு பரிசில்கள் இங்கு வழங்கப்பட்டன.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/noceQbCHXBU”]
