கொட்டாவ – மஹரகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
Related Articles
கொட்டாவ – மஹரகம வீதியின் மஹல்வாராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றும், கெப் ரக வாகனமொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அவர் ராஜகிரிய பகுதியை சேர்ந்த 72 வயதான நபரென தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.