பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் எகொட, உயன, மொரட்டுவ, பாணந்துறை, கெசல்வத்த, அலுபோமுல்ல ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இரவு வேளையில் நுழைந்து கூரிய ஆயுதங்களைக் காட்டி கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளை எடுத்துச் சென்று பொருட்களை கொள்ளையடித்து முச்சக்கர வண்டிகளுக்கு இடையில் விட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை அவதானித்த பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.