கண்டி கட்டவெல விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான அரச தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிபெற்று வந்த சிறுவன் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் இச்சிறுவன், பயிற்றுவிக்கப்படுவதாக கூறி இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் நிறுவனமொன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் இச்சிறுவனை பலாத்காரமாக தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். அத்துடன் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இனிப்பு பண்ட தயாரிப்பு நிறுவனத்தில் விசேட தேவையுடைய 3 ஆண் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு தமது வீடுகளுக்கு கூட செல்ல இடமளிக்காது குறித்த பெண் மோசமான முறையில் நடாத்தியுள்ளார். 41 வயதுடைய இப்பெண் நாள் தோறும் இரவு நேரங்களில் ஆபாச திரைப்படங்களை காண்பித்து சிறுவர்களை துன்புறுத்துல்களுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் பெண் துன்புறுத்தல் வழக்கொன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
