fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச காணி விஷேட ஒழுங்கு விதி சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் தீரப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 13:54

அரச காணி விஷேட ஒழுங்கு விதி சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் தீரப்பு

அரச காணி விசேட ஒழுங்கு விதிச்சட்டமூலம், மாகாண சபை விடயங்களுக்கு உட்படுதனால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியினால் மாகாண சபைகளுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.

இன்று காலை 10.30 மணிக்கு வழமைபோல் பாராளுமன்றம் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ஆரம்பமாகியது. நீதிமன்றம் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச காணி ஒழுங்கு விதி சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமனறம் வழங்கிய தீர்ப்பை பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

குறித்த சட்டமூலம் மாகாண சபை விடயங்களின் கீழ் அடங்குவதனால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியினால் சகல மாகாண சபைகளுக்கும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக அறிவிக்கப்படவேண்டுமெனவும் இல்லையேல் இது சட்டமூலமாக மாறாதெனவும உச்சநீதிமன்றம் தீரப்பளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார். 154 உ சரத்தின் அரசியல் யாப்பு சட்டமூலத்தில் குறிப்பிடப்படாதவாறு இச் சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதனால் ஏனைய சட்டவிடயங்கள் குறித்து தீர்ப்பு வழங்ப்படவில்லையென நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2019 13:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க