பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி குற்றம் சுமத்தியுள்ளார். பாகிஸ்தான் புலனாய்வு துறையினர் இந்தியாவின் தாக்குதல் திட்டம் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அபுதாபி பயணித்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், அங்கு இடம்பெற்ற முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பின்போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது உள்நாட்டு பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை வகுத்துள்ளது. இது பிழையான ஒரு தீர்மானமாகுமென பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குகிறது. இதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷி குற்றம் சுமத்தியுள்ளார்.
