பிரேசிலின் தெற்கு மாநிலமான Rio Grande do Sul ல் பெய்த கன மழை பேரிடரை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 க்கும் அதிகமானோரை காணவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேசிலின் தலைநகரில் உள்ள குய்பா ஏரி பெருக்கெடுத்துள்ளமையினால் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் காலவரையின்றி நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
