கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலை கட்டமைப்பு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமைபுரியும் வைத்தியர்கள் தயாரெனில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை சிகிச்சைக்கு வழங்குமாறு அழைப்பு விடுக்க முடியும்.
தேசிய வைத்திய முறை மூலம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க இராஜாங்க அமைச்சு தயாராகவுள்ளது. சிகிச்சைக்காக அயுர்வேத வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதேவேளை நாட்டிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் ஆயுர்வேத வைத்திய பிரிவொன்றை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
