இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சர்வதேச தரத்திலான மருத்துவ உபகரணங்களை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்கப்போவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிபிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேடின் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் பண்டாரகமயிலுள்ள மருந்து பயன்பாட்டு உபகரண உற்பத்தி தொழிற்சாலையின் முன்னேற்றம் தொடர்பான சந்திப்பொனறு அலரிமாளிகையில் இடம்பெற்றது. பெசில் ராஜபக்ஸ தலைமயில் இடம்பெற்ற சந்திப்பில் டெக்னோ மெடிக்ஸ் பிளக்சி கெயர் முதலீட்டு கம்பனிகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதன் பொது முகாமையாளர் சஞ்சீவ ரணசிங்க கருத்து வெளியிடுகையில் ஐக்கிய இராச்சியம் இதற்கென 15 மில்லியன் டொலருக்கும் கூடுதலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு மாதமளவில் முதலாவது உற்பத்திக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியுமென முகாமையாளர் தெரிவித்தார்.
தொழிற்சாலைக்கு அரசாங்கத்தினால் பாரிய உதவி கிடைத்ததாகவும் , உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் மெடின் ஸ்ரீ லங்கா இலட்சினையும் சர்வதேச சந்தைக்கு விடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ பயன்பாட்டு உபகரணங்களில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் ஏனைய 5 சதவீதம் உள்ளுர் தேவைகளுக்கு பயன்படுத்தப்படப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் ச்சன்ன ஜேசுமன, பாராளுமன்ற உறுப்பினர்ளான சஞ்சிவ எதிரிமான்ன, லலித் எல்லாவெல, ஜயந்த கெட்டகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
