ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கமைய சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லிய் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
